அதிகாலை செய்யும் தியானங்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரிய மாற்றங்களை உண்டாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுபற்றிய நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
அதிகாலை தியானம் என்பது பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் ஆன்மீக மரபுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாகும். மனம் அமைதியாகவும், சூழல் அமைதியாகவும், இரவு நேர நீண்ட உறக்கத்திற்குப் பிறகு உடல் புத்துணர்ச்சியுடனும், நினைவாற்றல் மிகுந்தும் மற்றும் சிந்தனையில் ஈடுபடுவதற்கான சரியான நேரமாக அமைகிறது. அதிகாலையில் தியானம் செய்வது உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்து, கவனத்தை அதிகரிப்பது மற்றும் நல்வாழ்வை தருவது வரை நல்ல மாற்றத்தை தருகிறது. மேலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியாகவும், நேர்மறையாகவும், ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறையை தர வழி செய்கிறது.
No comments:
Post a Comment