எந்த பாய் நல்லது:
நம் முன்னோர்களின் காலத்தில் தரையில் பாய் விரித்து தான் தூங்கினார்கள். இதனால் அவர்கள் இரவு நன்றாக தூங்கினார்கள், உடலுக்கும் குளிர்ச்சியையும் கொடுத்தது. ஆனால் இன்றைய காலத்தில் பெட்டில் தான் படுத்து உறங்குகிறார்கள். இந்த பாயில் தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. அதனால் தான் பெட்டில் படுத்து உறங்குகிறார்கள். பிறந்த குழந்தையை கூட பெட்டில் தூங்கும் பழக்கத்தை கொடுக்கிறார்கள். இந்த பெட்டில் படுக்கும் போது குழந்தைக்கு உடல் சூடு உண்டாகிறது. அதனால் சீக்கிரம் தூங்குகிறார்கள். இப்படி தூங்குவது நல்லதாக இருந்தாலும் அவர்கள் இதனை பழகி கொள்கிறார்கள். இதனால் அவர்கள் எங்கே சென்றாலும் பெட் இல்லாமல் தூங்க மாட்டார்கள்.
மூங்கில் பாய்:
மூங்கில் பாயில் படுத்து உறங்குவதால் உடலின் சூட்டை அதிகரிக்க செய்யும். ஏற்கனவே உங்கள் உடலில் சூடு அதிகமாக இருந்தால் இந்த பாயில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
பிரம்பு பாய்:
பிரம்பு பாயில் படுத்து தூங்குவதால் உங்களின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. உங்களது உடலில் சூடு அதிகமாக காணப்பட்டு இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் பிரம்பு பாயில் படுத்து உறங்குங்கள்.
பிளாஸ்டிக் பாய்:
பிளாஸ்டிக் பாயில் படுத்து உறங்குவது உங்களது உடலிற்கு ஏற்றதாக இருக்காது. அதனால் இந்த பாயில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.
கோரை பாய்:
கோரை பாயில் படுத்து உறங்குவது உடலிற்கு ஏற்றதாக இருக்கிறது. அதனால் இந்தபாயில் படுத்து தூங்குங்கள்.
தாழம்பூ பாய்:
தாழம்பூ பாயில் படுத்து தூங்குவதால் உடலில் உள்ள பித்தத்தை குறைக்க செய்கிறது. அதனால் உங்களுக்கு பித்தம் இருந்தால் இந்த பாயில் தூங்குங்கள்.
No comments:
Post a Comment